இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் நடிகர் விஜய்யோடு நண்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.மேலும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த இலியானா அங்கு இருக்கும் ரசிகர்களையும் கவர்ந்தார். ஆனால், சமீபகாலமாக திரையுலக வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இருப்பினும் திருமணம் ஆகாமல் இலியானா கர்ப்பமாகிவிட்டார் என்பது வதந்தியை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த மே மாதம் தன்னுடைய காதலர் Michael Dolan என்பவரை இலியானா திருமணம் செய்துகொண்டுள்ளாராம். இந்த திருமணம் நடந்த விஷயம் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலியானா கடந்த ஆகஸ்ட் 1ல் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது ஆண் குழந்தைக்கு Koa Phoenix Dolan என பெயர் வைத்துள்ளதாக தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.