‘நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது, பொள்ளாச்சி வழக்கில்?’ கேள்வி எழுப்பும் கார்த்தி!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளான முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு அது மூன்று முறை தள்ளிபோடப்பட்டது.

இந்நிலையில் இன்று டெல்லி திஹார் சிறையில் இந்த 4 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். நிர்பயாவிற்கு நீதி கிடைத்துவிட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தூக்கு தண்டனை தொடர்பாக திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்திவகையில் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பதிவில், ” கடைசியாக 8 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயா வழக்கில் நீதி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.ஏற்கனவே ஒரு வருடம் முடிந்துவிட்டது. அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

கொரோனா இந்தியாவில் உயிரிழப்பு 5-ஆக அதிகரிப்பு!!!

‘கோலியை தூக்கிட்டு இவரை இந்திய அணிக்கு கேப்டனாக்குங்கள்’ யுவராஜ்சிங் அதிரடி!