நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்..!!
நடிகர் ரஜினிகாந்து உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
தமிழ் திரைவுலகின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் படதில் நடித்து வருகிறார்.. இதற்கிடையில் வருகின்ற அக்டோபர் 10ம் ஞானவேல் இயக்கத்தில் லைக்க ப்ரொடக்ஸன் தயாரிப்பில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படமானது வருகின்ற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது..
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு சம்மந்தமான பிரச்சனையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்..
இதனால் சில பரிசோதனைகளுக்கு பின்னரே உரிய முறையான விளக்கம் கொடுக்க முடியும் எனவும்., அவரது உடல்நலம் குறித்த அப்டேட்கள் கொடுப்போம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்…