நந்தன் படத்துக்கு சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா..?
இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் நந்தன். இது தற்போது செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நந்தன் படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர்கள் நடித்து இருக்கிறார்கள், நந்தனுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இன்று வெளியான நந்தன் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்த தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.
முன்பே படத்தினை பார்த்த திரை விமர்சகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் நந்தனை பாராட்டி வந்தனர். பட ரிலீசுக்கு முன் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போ செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சி என ஆளும் கட்சி கூறி வரும் நிலையில் நீங்கள் படத்தில் முதலமைச்சரின் படத்தை வைத்து இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டப்பட்டது.
அதற்கு இயக்குநர் சரவணன் நான் படத்தில் 2024 ஆம் ஆண்டைத்தான் காண்பித்துள்ளேன். 2024 ஆம் ஆண்டை காட்டிவிட்டு வேறொரு முதலமைச்சரை என்னால் காட்ட முடியாது. சாதிய கொடுமைகள் நடைபெற்றது இப்போது முதலமைச்சர் ஆட்சியில் அது மாறாமல் தான் இருக்கிறது. நான் வேறேதும் நோக்கத்துடன் முதலமைச்சரின் படத்தை காட்சிப்படுத்த வில்லை என பதிலளித்தார். இவருடைய பதில் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி குறித்து விமர்சனம் செய்தது அனைவருக்கும் பேசு பொருளானது.
இன்று படம் பார்த்த சிவகார்த்திகேயன் படமானது ராவாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்து சென்றேன். சசிக்குமாரும் வித்தியாசமாகத்தான் நடித்திருப்பார் என எதிர்பார்த்தேன். இயக்குநர் என்னை முதல் காட்டிலேயே பிரம்மிக்க வைத்துவிட்டார். அதற்கு மேலே சசிக்குமார் அண்ணன் ரொம்ப வெள்ளந்தியா நடித்து மேலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு நிறைய அழுதேன், சிரிச்சேன், யோசித்தே கடைசியாக கைகளை தட்டினேன் எனவும் இவற்றை நமக்கு தந்தவர் இரா. சரவணன் எனவும், நந்தன் ஒரு அருமையான படைப்பு என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது சுற்றி வருகிறது.