AngryAngry CryCry LOLLOL LoveLove OMGOMG WTFWTF

‘2021ல் நான் தான் CM, வா மோதிக்கொள்வோம்’ வடிவேலு அதிரடி!

2021ல் நான் தான் முதலமைச்சர் என்று நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடர்பாக 3 திட்டங்களை வைத்துள்ளதாகவும், மக்கள் மற்றும் இளைஞர்களிடம் எழுச்சி தெரிந்த பிறகே அரசியலுக்கு தான் வருவேன் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்றும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்றும் அதிரடியாக கூறினார்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலுவிடம் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு கூறுகையில், “. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் அரசியலுக்கு வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாமே என்றும் அதே நேரம் ரஜினி முதல்வராக்கமாட்டேன் என்று கூறிய கருத்திற்கும் ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை வரவேற்பதாக கூறினார்.

மேலும், “2021ல் நான்ன் முதலமைச்சராகலாம் என நினைத்துள்ளேன் எனவும் அதை சிலர் கெடுக்க பார்ப்பதாகவும், தான் தேர்தலில் நின்றால் நீங்க ஓட்டு போடுவீங்க தானே என்று கேட்டுவிட்டு அப்படியென்றால் நான் தான் CM, வா மோதிக்கொள்வோம்” என்று நகைச்சுவையாக கூறினார்.

What do you think?

‘தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைவு’

CAA தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நாளை ஆலோசனை