இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு நடிகர் வடிவேலு கொடுத்த ரியாக்ஷன்…
ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்தது. அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன. மேலும் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியா பெயர் மாற்றம் குறித்து மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகவும் உள்ளது. இது மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து கேட்டப்போது,
“நான் அந்த அரசியலிலே போகவில்லை. அப்படி போகும்போது சொல்கிறேன்” என பட்டும் படாமல் பதில் அளித்தார். தொடர்ந்து, செய்தியாளர்கள் அதிகுறித்து கேள்வி எழுப்பினர். இந்தியாவை பாரத் என்று மாற்றினால் ஆதரவு கொடுப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்விக்கு, “அதேதான். அந்த அரசியல் கோணத்தில் நான் போகவில்லை.. திரும்பத் திரும்பத் கேட்டா.. திரும்பத் திரும்பப் பேசுற நீ..” என சிரித்தபடி கிண்டலாக பதில் அளித்தார்.