இரவு நேர பாடசாலை தொடங்கும் நடிகர் விஜய்..!! மக்களுக்கான புதிய திட்டம்..!
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில்.., அடுத்த படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதாகவும் சில செய்திகள் வெளியாகி வருகின்றனர்.
தற்போது நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருவதாக அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும்.., அவர் வைத்திருக்கும் இயக்கம் செய்யும் செயல்கள் அனைத்தும் அரசியலில் வருவதற்காக செயல்பட்டு வருவதாக பலரும் சொல்லுகின்றனர். ஆனால் தளபதி விஜயின் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் அவர் அரசியலுக்கு வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து நடிகர் விஜய் இயக்கத்தை விரிவு படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரின் அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் 28ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் “ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு மதிய உணவை வழங்கி இருக்கிறார்.
அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதியிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா வைத்து சான்றிதழ் வழங்கி ஊக்கதொகைகளை பரிசாக வழங்கினார். அதில் “ஓட்டிற்கு பணம் வாங்குவது தவறான ஒன்று ” என மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அதில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதித்துள்ளனர். அதில் கலந்த நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளருடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்.., பெரியார், காமராஜர் மற்றும் அம்பேத்கர் பற்றி பள்ளிமாணவர்கள் படிக்க வேண்டும். என மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில்.
இன்று நடந்த கூட்ட தொடரில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்தானம் செய்வதற்காக விழியகம், ரத்த தானம் செய்வதற்காக குருதியகம் பசி பட்டினியால் தவிப்போருக்கு விருந்தகத்தை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
மேலும் முழு நேரமாக அரசியலுக்கு வந்து விட்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது.., விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்காக தீவிரமாக பணியாற்ற இருப்பதாக மக்கள் இயக்கபொறுப்பாளர் தெரிவித்திருக்கிறார்.