நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பெயரை இழிவு படுத்தி வருகிறார் – நடிகை விஜயலட்சுமி
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்ய உள்ளதாக ஏமாற்றிவிட்டார் என்ற புகாரின் அடிப்படையில் தமிழர் முன்னேற்ற படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி உடன் இணைந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் மனுவினை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் அளித்தார்.
பின் நடிகை விஜயலட்சுமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கடந்த 2011 ஆம் ஆண்டு தான் வைத்திருந்த புகார்களை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என தற்போது தமிழர் முன்னேற்ற படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி உடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு க ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கையில் தான் எனது வாழ்வும் சாவும் உள்ளது என குறிப்பிட்டார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு இரக்கம் இல்லாத மனிதர். அவருடைய மனைவியாக இருந்த என்னையே மிக மோசமாக சித்தரித்து விமர்சித்தார் தனது கட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதாய் பொய்யாக பிரச்சாரம் செய்கிறார் சீமான்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை அதிமுக எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கவில்லை, இலங்கை நாட்டில் நடந்த போர் தொடர்பாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி வந்ததால் அதிமுக சீமானை விசாரிக்காமல் என்னை விசாரித்தது. சீமான் என்னுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்களையும் காணொளி காட்சிகளையும் ஊடகங்களில் வெளியிட்டேன் , தானும் சீமானும் கணவன் மனைவியாக இருந்ததற்கு இது ஒரு ஆதாரம் எனக் குறிப்பிட்டார்
சீமான் என்னிடம் ஒரு கோடி ரூபாய் அளித்ததாக மாற்றி பேசுகிறார் என்னிடம் 3 1/2 லட்சம் மட்டுமே கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளது . தலைவர் பிரபாகரின் பெயரை கொண்டு திமிருடன் பேசிக்கொண்டு வருகிறார் சீமான் பிரபாகரனின் பெயரை இழிவு படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளர்களை ஒருமையில் பேசினார் பின்னர் விஜயலட்சுமி செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்து சென்றார்