நடிகை கஸ்தூரி ஜாமின் மனு விசாரணை…!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
கடந்த நவம்பர் 3ம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில். நடிகை கஸ்தூரி பங்கேற்று தெலுங்கு சமுதாயத்தினரையும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களையும் குறித்து இழிவான முறையில் பேசினார்.
இதனால் கஸ்தூரி மீது மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொடர் புகார்கள் எழுந்ததது இதற்கிடையில் எழும்பூர் காவல்நிலையத்தில் அகில இந்திய தெலுங்கு ஜன சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் நடிகை கஸ்தூரி நேரில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார்., இதனால் அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது, போலிசார் கஸ்தூரி வீட்டு பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் ஹைதராபாத்தில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.. அதனையடுத்து போலீசார் ஹைதராபாத் சென்று நடத்திய சோதனையில் அவர் கடந்த 16ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்..
கைது செய்யப்பட்ட நடிகை கஸ்துரியை ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு போலீசார் 17ம் தேதி சென்னை அழைத்துவந்தனர். சிந்தரிபேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதற்கிடையில் இவர் தன் வழக்கறிஞர் மூலம் முன் ஜாமின் கோரி மனு அளித்துள்ளார்..
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, தான் தனியாக வசித்து வருவதாகவும்., சென்னை போலீசார் சம்மன் அனுப்பியது தனக்கு தெரியாது., சில தனிப்பட்ட காரணங்களுக்காக நான் ஹைதராபாத் சென்று விட்டேன் மற்றபடி நான் தலைமறைவாகவில்லை, என் கணவர் என்னுடன் இல்லை என் குழந்தைக்கு நான் மட்டுமே ஆதரவு எனவே தனக்கு ஜாமின் வழங்கும் படி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்…
இதனையடுத்து இந்த மனுவை விசாரணை செய்யும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என்ற காரணத்தால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..