கொரோனாவை இந்தியாவுக்கு வரவேற்ற பிரபல நடிகை – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவுவதை வரவேற்று, டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட நடிகை ஷர்மியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இதுநாள் வரை இந்தியாவை எட்டிப்பார்க்காத கொரோனா தற்போது இங்கும் 23 பேரை தொற்றியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தீவிர மருத்துவ கண்காணிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரபல சினிமா நடிகையான ஷர்மி, கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை வரவேற்கும் விதமாக வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ஆல் தி பெஸ்ட் நண்பர்களே, உங்களுக்கு தெரியுமா? கொரோனா வைரஸ் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட சில நகரங்களுக்கு வந்துவிட்டதாகவும், ஒருவழியாக இந்தியாவிற்குள்ளும் வந்து விட்டதே” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஷர்மியை கடுமையாக சடியிருந்தனர். இதையடுத்து இந்த வீடியோவை தனது வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கிய ஷர்மி, தனது தவற்றுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

What do you think?

‘குழந்தைகள் ஆபாச பட விவாகரம்’ வேலூரில் இளைஞர் ஒருவர் கைது!

இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்த பொல்லார்ட்!