இன்டிகோ நிறுவனத்திடம் நடிகை ஸ்ருதிஹாசன் கேள்வி…!! காட்டு தீயை பரவும் பதிவு…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் மும்பையிலிருந்து புறப்படும் இன்டிகோ விமானம் நான்கு மணி நேரம் தாமதமானதாகவும், அது குறித்து இன்டிகோ நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்காததால் சிரமத்தை சந்தித்ததாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராகவும், அரசியல் வாதியாகவும் இருப்பவர் கமலஹாசன். இவரது மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமில்லால் தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மும்பையில் வசித்து வரும் ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இன்டிகோ நிறுவனத்திடம் கேள்வி :
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் மும்பையில் இருந்து சென்னை வரும் இன்டிகோ விமானம், நான்கு மணிநேரம் தாமதமானதாகவும், ஆனால், தாமதம் தொடர்பான எந்த ஒரு முறையான அறிவிப்பையும் இன்டிகோ நிறுவனம் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் சாதாரணமாக குறை சொல்லும் நபர் இல்ல. ஆனால் இன்டிகோ நிறுவனத்தினர். இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். கடந்த நான்கு மணிநேரமாக எந்த தகவலும் கிடைக்காமல், விமான நிலையத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறோம். தயவு செய்து உங்கள் பயணிகளுக்கு உதவி செய்ய முன் வருவீர்களா..? என அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து இன்டிகோ நிறுவனம் ஸ்ருதிஹாசன்க்கு பதில் அளித்துள்ளது. அவரின் இந்த பதிவு இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, இன்டிகோ நிறுவனம் சார்பில் அவருக்கு பதில் அளித்துள்ளது. அதில், விமானம் தாமதமானதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நீண்ட நேரம் காத்திருப்பது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். மும்பையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ருதிஹாசன் தற்போது என்ன படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதை ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா,மகேந்திரன் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பரிவ், சண்டை கலைஞர்களாக இருக்கின்றனர். கூலி திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..