‘சீமானை தப்பிக்க விடமாட்டேன்’ கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரண்ட்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக போலீஸ் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரின்பேரில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை மற்றும் நம்பிக்கை மோசடி என 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் சீமான் கைது செய்யப்படவில்லை. கடந்த சில நாட்களாக முகநூல் பக்கத்தில் வீடியோ மூலம் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சீமான் கட்சி பொதுக்கூட்டங்களில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், அவர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூகவலைத்தளங்களில் தன்னை விலைமாது என்று குறிப்பிடுவதாகவும்” தெரிவித்துள்ளார்.இந்த புகாரை அவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

What do you think?

‘மாஸ்டர் குறித்த CSKவின் வைரல் Tweet’ மாஸ்டர் படக்குழுவின் ரியாக்சன்!

‘ம.பி அரசியலில் அடுத்த அதிரடி திருப்பம்’ பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா!