சீமான் மீது கமிஷனரிடம் புகார் – நடிகை விஜயலட்சுமி அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் மீதும், அவரது கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.

‘ப்ரண்டஸ்’ படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. இவர் 2011 ஆம் ஆண்டு சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதில், 3 ஆண்டுகளாக சீமான் தன்னை காதலித்ததாகவும் ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் சீமான் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சமீபகாலமாக சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை சீமானும் அவரது கட்சியினரும் பேசி வருவதாக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

விஜயலட்சுமி – சீமான்

அரசியல் மேடைகளில் தன்னை பற்றி அவதூறு பரப்புவது மட்டுமின்றி, கொலை செய்துவிடுவோம் என்று சீமானின் கட்சியினர் தொடர்ந்து மிரட்டுவதாகவும் விஜயலட்சுமி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில், சீமானையும் அவரது கட்சியினரையும் திட்டியதோடு “நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரையிலும் உங்களை விட மாட்டேன், நான் ரொம்பவும் நொந்து போயிருக்கிறேன், சீமானை தப்பிக்க விடமாட்டேன். கமிஷனர் அலுவலகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன், சீமானை தூக்கி உள்ளே போடும் வரைக்கும் போராடுவேன்” என விஜயலட்சிமி மிக ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று, சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதோடு, சமூக வலைத்தளங்களில் தன்னை வேசி என கொச்சைபடுத்தி வதந்திகளை பரப்புவதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதனால் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சீமான் மீது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதனால் சீமான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

What do you think?

ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்தியர்கள் மீட்பு!

ம.பியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பாஜக?