உங்களுக்கு சமைக்க தெரியாதா..? கவலை வேண்டாம்..! இதை படிங்க..!
கீரை ருசியாக இருக்க வேண்டுமெனில் சிறிது சர்க்கரை நீரில் ஊறவைத்து சமைக்கலாம், அதனுடைய பச்சை நிறமும் மாறாமல் இருக்கும்.
வறுவல் அல்லது கூட்டில் காரமோ அல்லது உப்போ அதிகமாகிவிட்டால் பிரெட் அல்லது ரஸ்க் துண்டுகளை சேர்க்க அதன் காரம் மற்றும் உப்பு குறைந்துவிடும்.
சப்பாத்தி சுவையாக இருக்க அதில் கொஞ்சமாக வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து சுடலாம்.
பூரி செய்ய மாவில் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்து சுட்டால் அதிக நேரத்திற்கு பூரி மொறுமொறுப்பாக இருக்கும்.
முட்டை உடைத்து ஊற்றி செய்த குழம்பில் கடைசியாக தேங்காய் மற்றும் சோம்பு அரைத்த கலவையை ஊற்றி கொதிக்க வைக்க சுவை கூடும். முட்டை வாடையும் வராது.
பூசணி துருவலை சிறிது நேரத்திற்கு ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்து அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.
தயிர் வடை செய்ய வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேகவைக்கும்போது சிறிது உப்பு சேர்த்தால் கிழங்கு உடையாமல் இருக்கும்.