ஆந்திரா ஸ்டைல் முட்டை சாதம்..!
தேவையான பொருட்கள்:
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை
கிராம்பு – 3
ஏலக்காய் – 1
பாஸ்மதி அரிசி – 1 கப் (வேகவைத்தது)
முட்டை – 7
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
கறிவேப்பிலை
தக்காளி – 2
உப்பு -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள்
வெங்காயத்தாள்
செய்முறை:
ஒரு வாணலில் மிளகு,சீரகம்,சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பின் ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் உப்பு,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.மேலும் அரைத்த மசாலாவை சிறிது சேர்த்து வதக்கவும்.
அந்த வாணலில் வதக்கியவற்றை ஓரம் தள்ளி, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை உடைத்து ஊற்றி பின் உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வேகவைக்கவும்.
வேகவைத்த சாதம்,வெங்காயத்தாள், அரைத்த மசாலா சேர்த்து வதக்கி இறக்கவும்.
அவ்வளவுதான் ஆந்திரா ஸ்டைலில் முட்டை சாதம் தயார்.