கிரீமியான சிக்கன் மஷ்ரூம் கிரேவி..! செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
மஷ்ரூம் – 1/2 கிலோ
சோள மாவு – 100 கிராம்
மிளகு தூள் – காரத்திற்கு ஏற்ப
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
வெண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 2
பூண்டு – 2 முழுஅளவு
பிரெஷ் கிரீம் – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை ஒரு நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதி சோள மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின் மஷ்ரூமை உங்களுக்கு பிடித்த வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் மற்றும் பூண்டை சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அடிப்பில் ஒரு வாணலை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை கொட்டி அது முக்கால் பதத்திற்கு வேகும் வரை வதக்கி இறக்கவும்.
மற்றொரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் பூண்டு மற்றும் மஷ்ரூம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அத்துடன் சிக்கனை போட்டு நன்றாக வதக்கி அதில் பிரெஷ் கிரீம் கலந்து 10 நிமிடத்திற்கு வதக்கி பின் கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான சிக்கன் மஷ்ரூம் கிரேவி தயார்.