சோயா சிக்கன் 65..!
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா 3 ஸ்பூன்
கெட்டி தயிர் 1 ஸ்பூன்
சோளமாவு 1 ஸ்பூன்
மைதா மாவு 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானது அதில் சோயா உருண்டைகளை சேர்த்து 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊறவைக்கவும்.
முப்பது நிமிடம் கழித்து சோயா உருண்டைகளை பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.
சோயாவில் தயிர், சிக்கன் 65 மசாலா, சோளமாவு, மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இதனை அப்படியே 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் ஊறவைத்த சோயா உருண்டைகளை போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான சோயா 65 தயார்.
இப்படி சுவையா குழந்தைகளுக்கு ஈவினிங்கில் செய்து கொடுங்க அவர்கள் விரும்பி சாப்பிடுவாங்க..