வெள்ளரிக்காய் தேங்காய் பச்சடி..!
வெள்ளரிக்காய் 2 துருவியது
கொப்பரை தேங்காய் 1 கப்
பச்சை மிளகாய் 1
எண்ணெய் 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய்,தேங்காய்,கடுகு,சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதில் துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்த அந்த விழுதை சேர்த்து கலக்க வேண்டும்.