கீரை சோள சில்லா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கீரை 1 கப்
சோளம் 1 கப்
கடலை மாவு 1 கப்
வெங்காயம் 1/2 கப்
மிளகுத்தூள் 1/4 கப்
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
மிளகு 1/4 ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு மிக்ஸியில் கீரை மற்றும் சோளம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றை சேர்த்து அதில் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவி அரைத்த கலவையை சிறிது ஊற்றி பரப்பி விடவும்.
ஓரங்கள் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு எண்ணெய் தடவி பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
ஒரு தட்டில் வைத்து இதனுடன் தயிர், புதினா சட்னி, தக்காளி சாஸ் பயன்படுத்தி சாப்பிடலாம்.
அவ்வளவுதான் கீரை சோள சில்லா ரெசிபி தயார்.