சன்னா மசாலா செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
வெள்ளை சுண்டல் ஒரு கப்
வெங்காயம் 4
தக்காளி 2
மல்லித்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
கரம் மசாலா 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
பட்டை 2
கிராம்பு 3
சோம்பு 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
செய்முறை:
வெள்ளை சுண்டலை நீரில் ஆறு மணி நேரத்திற்கு ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
சுண்டல் ஊறிய பிறகு ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 7 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
வதக்கியதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
வேகவைத்த சுண்டலில் கொஞ்சம் எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வேகவைத்த சுண்டலை அதன் நீரோடு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக சுண்டி வந்ததும் மசித்த சுண்டல் சேர்த்து கிளறி விட்டு, கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.