இன்னைக்கு இரவு சிக்கன் பிரைட் ரைஸ் செய்ங்க..!
முட்டை – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – 3 டீஸ்பூன்
வினிகர் – ஒரு டீஸ்பூன்
கேரட் – 1
குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் – 1 ஒன்று
வடித்த சாதம் – 2 கப்
வெங்காயத்தாள் – 2 டேபிள் ஸ்பூன்
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை உடைத்து ஊற்றி அதில் உப்பு சேர்த்து பொடிமாஸ் செய்துக் கொள்ள வேண்டும்.
சிக்கனை சுத்தம் செய்து அதில் 65 மசாலா போட்டு பொரித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கனை போட்டு அத்துடன் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் கேரட், குடைமிளகாய், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பின் அதில் வடித்த சாதம் , மிளகாய்த்தூள், சோயா சாஸ் சேர்த்து கிளற வேண்டும்.
பின் அத்துடன் பொடித்த முட்டை , வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
இதுபோல டேஸ்டியான சிக்கன் ரைஸ் வீட்டிலே செய்து சாப்பிடலாம்.
