கமகமவென சிக்கன் நெய் ரோஸ்ட்..!
அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் முக்கியமானது சிக்கன். இந்த சிக்கனை நெய்யில் ரோஸ்ட் செய்து சாப்பிட நல்லா வாசனையாக கமகமவென இருக்கும்.
நெய்யானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும், தசைகளை வலுப்படுத்தவும், கண் பார்வையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
வறுக்க
- ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு
- இரண்டு டீஸ்பூன் சீரகம்
- ஒரு டீஸ்பூன் சோம்பு
- ஏழு வர மிளகாய்
சிக்கனில் கலக்க
- தயிர்
- உப்பு
- மஞ்சள் தூள்
அரைக்க
- மல்லி
- சீரகம்
- மிளகு
- சோம்பு
- வரமிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- எலுமிச்சை சாறு
ரோஸ்ட் செய்ய
- நெய்
- மசாலாவுடன் கலக்கி வைத்த சிக்கன்
- கறிவேப்பிலை
செய்முறை:
ADVERTISEMENT
- சிக்கனை முதலில் சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மல்லி, மிளகு, சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொண்டு ஆறவைக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து அதில் பூண்டு, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- சுத்தம் செய்த சிக்கனில் அரைத்த கலவையை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு இதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கனை சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
- கடைசியாக கறிவேப்பிலையை தூவி கிளறி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் கமகமவென சிக்கன் நெய் ரோஸ்ட் தயார். மகிழ்ச்சியாக சாப்பிடுங்க.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
