தித்திக்கும் அத்திப்பழ அல்வா..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கக்கூடிய அத்திப்பழ அல்வா செய்யலாமா..
அத்திப்பழம் – 250 கிராம். (ஊற வைக்கவும்)
பால்கோவா – 200 கிராம்.
நெய் – தேவையான அளவு.
சர்க்கரை – சுவைக்கு ஏற்ப்ப.
முந்திரி, திரட்சை, பாதாம் – தேவையான அளவு.
ஏலக்காய் – 2
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் ஏலக்காய் சேர்த்து பின் ஊறவைத்த அத்திபழத்தை தண்ணீரோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- ஊறவைத்த நீரையும் அதோடு ஊற்றி அத்தி நன்றாக சாஃப்டாக வரும் வரை வேகவைக்கவும்.
- பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அனைத்தும் ஒன்றாக திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- திரண்டு வந்ததும் அதில் கோவாவை சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதத்தில் வந்ததும் அதில் நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து கிளறிவிட்டு ஆறவிடவும்.
- அவ்ளோதான் டேஸ்டியான அத்தி அல்வா தயார்.
