செல்போனில் ஆபாச படம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை – ஏடிஜிபி ரவி

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தாலோ அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்தாலோ கைது செய்யபடுவார்கள் என்று தமிழக காவல்துறையினர் அறிவித்தனர். அதன்படி இதுவரை 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.  

இந்நிலையில் இன்று சென்னை ஏடிஜிபி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இனி செல்போனில் ஆபாச படங்கள் வைத்திருந்தாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்“ இந்தியாவிலே தமிழகத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவாக உள்ளது. குறிப்பாக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

தமிழகம் முழுவதும்  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் முறை உள்ளது. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பட்டியல், ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஆவணம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், ”குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என்று போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரைசெல்போனில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை வைத்திருந்தவர்களில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த ஆபாச படம் குற்றம் தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஜி.களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. யாரேனும் புகாரளிக்கும் பட்சத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றும்  தெரிவித்தார்.

What do you think?

கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

ரவுடிக்கு உதவிய ‘மாஸ்டர்’ வில்லன் – டிக்டாக் வைரல்