ஆடி வெள்ளி கருமாரியம்மன் சிறப்பு வழிபாடு..
ஆடி மாதம் என்றாலே மிகவும் விஷேம் ஆன ஒரு மாதம். ஆடி மாதம் தொடங்கியதுமே.., தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.
ஆடி மாதத்திலும் மிகவும் விஷேஷமான நாள் எதுவென்றால் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, இந்த நாட்கள் தான்.., அதிலும் இன்று முதல் “ஆடி வெள்ளி”.
ஆடி வெள்ளி அன்று அதிகாலை திருவேற்காட்டில் உள்ள “கருமாரியம்மன்” கோவிலுக்கு சென்று.., முதல் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
அது ஏன் கருமாரியம்மன் மட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்…?
முத்துமாரியம்மன், அங்காள அம்மன், பெரியபாளையத்து அம்மன்.., மருத்துவர் ஓம் சக்தி, திருவொற்றியூர் வடிவுடையம்மன்.., ராஜ ராஜேஸ்வரி அம்மன் என அனைத்து அம்மன்களையும் நம் வீட்டிற்கு வர்ணிப்பு அழைத்து கூப்பிட்டால் மட்டுமே வீட்டிற்கு வருவார்கள். ஆனால் கருமாரியம்மன் மட்டும் தான்.., நாம் மனதார வேண்டி என் இல்லறத்திற்கு வாங்க அம்மா என்று கூப்பிட்டாலே வந்து விடுவார்.
வர்ணிப்பு அழைத்து வைத்து கூப்பிட்டால்.., நம் இல்லறத்தில் காவல் தெய்வமாகவும் கருமாரியம்மன் இருப்பார்.
ஒவ்வொரு ஆடி வெள்ளியும் சென்று வழிபடலாம். முக்கியமாக முதல் ஆடி வெள்ளி அன்று கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால்.., சிறந்த பலன் கிடைக்கும்.
* கன்னிப் பெண்கள் திருவேற்காட்டில் இருக்கும்.., கருமாரியம்மன் கோவிலின் பக்கத்தில் இருக்கும் நாக புற்றின் மேல் மஞ்சள் மற்றும் குங்குமம் கொற்றி வழிபாட்டால்.., சீக்கிரமே மாங்கள்ய பாக்கியம் கிடைக்கும்.
* தீராத நோயால் அவதி படுபவர்கள் திருவேற்காடு கருமாரிய அம்மனுக்கு பூமாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி.., வழிபாட்டால் நோய்கள் தீர்ந்து விடுமாம். முக்கியமாக உப்பு கொட்டி வழிபாடு செய்யலாம். அதாவது தீராத நோயாள் அவதி படுபவர்கள்.
* கருமாரியம்மன் மற்ற அம்மன்களை விட.., கண் முன்னே நடக்கும் அநீதிகளுக்கு தண்டனை தருபவர். அதை தான் ஒரு பாடலிலும் சொல்லி இருப்பார்கள் “கண் கண்ட வேற்காட்டு மாரியம்மா..” என்று சொல்லுவார்கள்.
* வீட்டில் உங்களை சுற்றி இருக்கும் உறவினர்கள் உங்களுக்கு பிரச்சனை கொடுப்பது., சொத்து தகறாரு என்று இருந்தால்.., வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கருமாரியம்மனை வழிபாட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், சிறப்பு ஆலயங்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..