“டெல்லியின் முதலமைச்சராக பதவி ஏற்றார் அதிஷி மர்லினா..” அதிஷி கடந்து வந்த அரசியில் பாதை..!
டெல்லியின் முன்னால் முதலமைச்சர் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதை தொடர்ந்து., தற்போதைய முதலமைச்சராக அதிஷி மர்லினா பதவியேற்றுள்ளார்.. சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோர் வரிசையில் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் பட்டியலில் அதிஷி இணைந்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ராஜினாமா :
கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் கடந்த ஜூலை 12-ம் தேதி கு இடைக்கால ஜாமீனில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு சென்றார் அதனை தொடர்ந்து செப்டம்பர் 13ம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்
அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி “சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்றும் குற்றபத்திரிக்கையில் சரியான ஆதாரங்கள் இல்லை என்றும் நீண்ட காலம் சிறையில் இருப்பது அநியாயமாக ஒருவரின் சுதந்திரத்தை பறிப்பதாகும்” என கூறி ஜாமீன் வழங்கினார்.. ஜாமினில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த செப்டம்பர் 17ம் தேதி தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..
அதனை தொடர்ந்து இன்று டெல்லியின் தற்போதைய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யபட்டார்.. முன்னதாக டெல்லியின் ஆளுநர் ராஜ் நிவாஸில்., துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சனா அதிஷிக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமானம் செய்யப்பட்டது.. டெல்லியின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு அதிஷி பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/i/status/1837453791907741834
சுற்றுச்சூழல் மற்றும் பொது நிர்வாகத்துறை அமைச்சராக கோபால் ராய் பதவி ஏற்றார்..
சுற்றுலாத் துறை அமைச்சராக சௌரப் பரத்வாஜ் பதவி ஏற்றார்..
போக்குவரத்து துறை அமைச்சராக கைலாஷ் கஹலோட் பதவி ஏற்றார்…
உணவு பாதுகாப்புதுறை அமைச்சராக இம்ரான் ஹுசைன் பதவி ஏற்றார்…
இந்த பதவி ஏற்பை தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் டெல்லியில் 70 இடங்களில் 61 இடங்களில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதால் அதிஷி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக டெல்லி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது..
கடந்த 2013 ஆம் ஆண்டு அதிஷி ஆம் ஆத்மி கட்சியில் முதன் முதலாக இணைந்தார். ஆரம்பத்தில் அரசின் ஆலோசகராக இருந்த அதிஷி கடந்த 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கல்காஜி தொகுயில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.. அதனை தொடர்ந்து கல்வி மற்றும் பொதுப்பணித் துறை (PWD) அமைச்சராக பதவி உயர்வு வழங்கப்பட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..