மக்களவை ஒத்திவைப்பு..!! அவைத்தலைவர் ஓம்பிர்லா அறிவிப்பு…!!
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடைபெற்ற சிறப்பு விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது தற்போது பேஷனாகி விட்டது என்றும் இந்த அளவுக்கு கடவுளின் பெயரை கூறி இருந்தால் 7 பிறவிகளிலும் சொர்க்கத்தை அடையலாம் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. மேலும் நாடு முழுவதும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியது, அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும் மக்களவையில் இந்திய கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டத்தால் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னர் மக்களவை அவைத்தலைவர் ஓம்பிர்லா அதன் தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..