திமுகவின் அரசின் செயல்களை சுட்டிக்காட்டாத துப்பில்லாத அண்ணாமலை அதிமுகவை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜக தலைவர் அண்ணாமலை இனி பாஜகவில் இருக்கிற வரை அக்கட்சியே காலியாகிவிடும் எனத் தெரிவித்தார்.
இன்று அண்ணாமலை நாளை உண்ணாமலை கூட வரலாம் இவர் பாஜகவில் நிரந்தரம் கிடையாது எனத் தெரிவித்தவர், அண்ணாமலை பேச்சை தேசியத் தலைவர் நாட்டா, பிரதமர் மோடி ஆகியோரும் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள் எனக்கூறியுள்ளார்.
பாஜக ஐடி நிர்வாகி நிர்மல்குமார் அண்ணாமலை ரகசியத்தை வெளியிடுவார் என்ற பயத்தில் தற்போது இப்படி வருகிறார் இதை அண்ணாமலை தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
எந்தக் கட்சி நிர்வாகியாக இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக மாற்றுக் கட்சியில் சேரலாம் அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம். அண்ணாமலை பயத்தின் உச்சியில் பேசி வருகிறார். நிர்மல் குமார் என்ன ரகசியத்தை வெளியிடுவார் என்று பயத்தில் இருக்கிறார் எனக்கூறியுள்ளார்.