2-வது நாளாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கட்சி வளர்ச்சி பணிகள், தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய ஆலோசனை, 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இன்றைய ஆலோசனையில் திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களுடன் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்தினார்கள். நேற்றைய கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. அதுகுறித்து இன்றும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

What do you think?

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்.பி., நவாஸ்கனி ஆறுதல்