பிப்ரவரி 14ஆம் தேதி அதிமுகவின் கடைசி பட்ஜெட்

2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான சில ஆலோசனைகள் மற்றும் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ஆம் தேதி காலை 10மணிக்கு தாக்கல் செய்யப்படும் எனவும், தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். மேலும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு போன்ற மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என தெரிவித்தார். அதிமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழுமையான பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தமன்னாவா இது? – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ

பாலியல் தொந்தரவு; நடுத்தெருவில் தூக்கு! – இதுதான் சட்டம்