அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் கொடுத்த புகார் வாபஸ்!!!

செருப்பை கழட்டி விட சொன்ன விவகாரத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கொடுக்கப்பட்ட வழக்கை பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் வாபஸ் பெற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கிவைக்க சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டி விட கூறினார். இதையடுத்து அச்சிறுவனும் அமைச்சரின் செருப்பை கழட்டி விட்டார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் இந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், செருப்பை கழட்டி விட்ட சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் சீனிவாசனுக்கு எதிராக புகார் அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சிறுவனின் குடும்பத்தினரை ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு நேரில் வரவழைத்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் “ அந்த நிகழ்வு குறித்து, சிறுவனிடமும், அவனது பெற்றோரிடமும் வருத்தம் தெரிவித்தேன்” என்று கூறின ார்.

What do you think?

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்