தனுஷ் மீதுதான் பாசம்.. ஐஸ்வர்யாவை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்..!
கோலிவுட்டில் நடிகர் மற்றும் நடிகைகளின் விவாகரத்து செய்திகள் தான் அனல் கிளப்பி வருகிறது. அந்த வகையில் சமிபத்தில் விவாகரத்தான ஜீவி பிரகாஷ், சைந்தவி முதல் தனுஷ் ஐஸ்வர்யா வரை தமிழ் சினிமாவில் பேசும் பொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தான் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தனர்.
ஆனால் முறையாக நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்து வாங்கமல் இருப்பதால் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகை ஐஸ்வரயா கடந்த மாதம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி இவர்கள் பற்றிய கருத்துகள் வந்த கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் தயாரிப்பாளர் மாணிக்க நாரயணன் அளித்த பேட்டி பூதாகரமாக வெடித்துள்ளது.
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள மாணிக்கம் நாரயணன் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கும் போது தான் விவாகரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. தனுஷின் குழந்தைகள் தங்கள் தாய் ஐஸ்வர்யாவை-விட அப்பா தனுஷுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால் தான் இரண்டு மகன்களும் தகப்பனின் பாதுகாப்பில் வளர்கிறார்கள். இன்றைய பெண்கள் பணம் வரும் போது விஷயம் புரியாமல் நடந்து கொள்கிறார்கள்.
விவாகரத்துக்கு பெண்கள் தான் காரணம் :
இப்போதெல்லாம் பெண்கள் தனித்து நிற்க வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த நடைமுறை தான் விவாகரத்து நடப்பதற்கு காரணமாக நான் நினைக்கிறேன். நான் இப்படி சொல்வதால் என்னை பெண்கள் விமர்சித்தாலும், எப்படி பேசினாலும் எனக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. மனதில் பட்டதைத்தான் நான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.
பெண்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் :
ஆண்கள் தவறு செய்யும்போது அதனை பெண்கள் சமாளிக்க வேண்டும். சில பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தான் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் இருவரும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும். பெண்கள் கொஞ்சம் பொறுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் காட்ட வேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் தளர்வான மனப்பான்மையை ஆண்டவன் கொடுத்திருக்கிறார். பெண்கள் அனுசரித்து வாழ வேண்டும் என்பது தான் எனது கருத்து ஆகும்.
ஐஸ்வர்யா மீது மகன்களுக்கு பாசம் இல்லை :
அட்ஜஸ்ட் பன்னுவது தவறாக இருந்தாலும் குடும்பத்தில் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். அந்த வகையில் தனுஷ் ஐஸ்வர்யா ஜோடியில் ஐஸ்வர்யா அட்ஜஸ்ட் செய்து இருக்கலாம். மேலும் இரண்டு குழந்தைகளால் தனுஷ்தான் நேசிக்கப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன்.
அதேசமயம் ஐஸ்வர்யா மீது அவ்வளவாக மகன்களுக்கு பாசம் இல்லை என்றும் சொல்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் அவர்கள் உங்களை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியவரும்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..