சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்……அட ஹீரோ இவரா.! ஷாக் ஆன ரசிகர்கள்….!
சூர்யா ஜோதிகா திரைப்படங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.இவர்கள் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார்,காக்க காக்க உயிரிலே கலந்து,மாயாவி,ஜில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமா மக்களின் மனதை கொள்ளையடித்தது.
ஜில்லுனு ஒரு காதல்:
கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இதில் பூமிகா,வடிவேலு,சந்தானம், ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.இ ஞானவேல் தயாரிப்பில் என் கிருஷ்னா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைந்திருந்தார்.
மேலும் சூர்யா-ஜோதிகாவின் கெமிஸ்ட்ரி, பூமிகாவின் உணர்வுபூர்வமான நடிப்பு, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வடிவேலு காமெடி என அனைவராலும் ரசிக்கப்பட்டு இப்படம் வெற்றி பெற்றது.
தற்போது 18 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
சில்லுனு ஒரு காதல்-2
இயக்குநர் கிருஷ்ணா இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம்.
இப்படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் கவின் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
-பவானிகார்த்திக்