இன்னிக்கு இது செய்ங்க… உளுந்து புட்டு இட்லி…
உளுந்து-1 கப்.
நாட்டுச்சக்கரை-1 கப்.
ஏலக்காய்-1 தேக்கரண்டி.
சுக்கு பொடி-1 தேக்கரண்டி.
உப்பு-1 சிட்டிகை.
பொட்டுக்கடலை- சிளிதளவு.
நறுக்கிய தேங்காய்- சிறிதளவு.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் உளுத்தம் பருப்பை போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவில் ஒரு கப் நாட்டுசர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பின் அதை 8 மணி நேரத்திற்கு நன்றாக புளிக்கவிட வேண்டும்.
பின் அதில் ஏலக்காய், சுக்கு மற்றும் உப்பு கலந்து கொள்ளவும்.
பின் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் ஊற்றி, இட்லி குழியில் நறுக்கிய தேங்காய் மற்றும் பொட்டுகடலை வைத்து அதன் மீது மாவை ஊற்றவும்.
10 நிமிடத்திற்கு வேகவைத்து எடுத்தால் டேஸ்டியான உளுந்து புட்டு இட்லி தயார்.