நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை அழிக்க எளிய வழிகள்..!
இக்காலத்தில் இருக்கும் மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் சுவாசம் பாதிக்கப்படுகிறது. இக்காற்றினால் மூச்சுக்குழல் அழற்சி, நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா ஆகியவை ஏற்படுகிறது.
நுரையீரலை பாதுகாக்க சில வகையான பானம் குடிக்கலாம், அவற்றை பற்றி பார்ப்போம்.
மஞ்சள் மற்றும் மிளகு பால்:
ஒரு மஞ்சள் கிழங்கு துண்டை நசுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து நசுக்கிக் கொள்ள வேண்டும். பாலை காய்ந்ததும் அதில் நசுக்கிய பொடியை கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக காய்ச்சி சுண்டியதும் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அப்படியே இந்த பாலை வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். இதனால் நுரையீரலில் இருக்கும் சளி நீங்குகிறது மற்றும் நுரையீரலில் இருக்கும் தொற்றுகள் நீங்குகிறது.
அதிமதுரம் டீ:
அதிமதுரம் நுரையீரலில் இருக்கும் சளியை நீக்கி நுரையீரலில் சுவாசத்தை மேம்படுத்துகிறது. அரை ஸ்பூன் அதிமதுரம் பொடியை டீத்தூளுடன் சேர்த்து கொதிக்கவைத்து வடிக்கட்டி குடிக்க வேண்டும்.
துளசி மூலிகை பானம்:
இஞ்சி, துளசி, கிராம்பு ஆகியவற்றை இடித்து சம அளவில் ஒரு ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி தொடர்ந்து குடித்து வர நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது, குளிர்காலங்களில் வரும் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
கிரீன் டீ:
கிரீன் டீயில் அதிகமான ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இருக்கிறது. இதை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, நுரையீரலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கிறது.
தேங்காய் பால்:
தேங்காய் பால் நுரையீரலில் இருக்கும் அழற்சியை குணப்படுத்துகிறது. தேங்காய் பால் சுவாசத்தை இயல்பாக வைக்கிறது.
கேரட் சாறு:
கேரட் சாற்றில் அதிகமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கேரட் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாச மண்டலத்தை சீராக வைக்கிறது.
இஞ்சி எலுமிச்சை சாறு:
சூடான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கால் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து சுவைக்கு சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது அது நுரையீரலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மிளகு சுக்கு டீ:
சுக்கு மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து இடித்து சூடான நீரில் கலந்து டேஸ்டுக்கு பனங்கற்கண்டு கலந்து குடிக்கும்போது அது இருமலை குறைத்து சுவாசத்தை மேம்படுத்துகிறது.
ஆடாதோடை இலை சாறு:
ஒரு கைப்பிடி அளவு ஆடாதோடை இலையை தண்ணீரில் காய்ச்சி சுண்டியதும் அதில் பனை வெல்லம் சேர்த்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரும்போது நுரையீரலில் தொற்றுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.