ஹோட்டல் சுவையில் கார சட்னி..!
தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம் 3
- பழுத்த தக்காளி 4
- காஷ்மீரி மிளகாய் 8
- புளி நெல்லிக்காய் அளவு
- பெரிய பல் பூண்டு 5 (தோலுடன்)
- உப்பு தேவையானது
- தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 1/2 டீ ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் 1
- கறிவேப்பிலை 1 சிறிது
- நல்லெண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தக்காளி, மிளகாய், புளி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வதக்கியவற்றை ஆறவைக்க வேண்டும்.
ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தவற்றை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே வாணலை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
தாளித்ததை சட்னிக்கு மாற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் இப்போ சுவையான ஹோட்டல் ஸ்டைலில் கார சட்னி தயார்.
இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.