சூடான பிரெட் உருளைகிழங்கு சீஸ் செய்வது எப்படி..!
துருவிய சீஸ் – கால் கப்
உருளைக்கிழங்கு – 4
பிரெட் துண்டுகள் – 8
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – ஒரு சிறுகட்டு (சுத்தம் செய்யவும்)
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பால் – ஒரு கப்
மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
- உருளைகிழங்கை வேகவைத்து பின் தோல் நீக்கி அதை கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை போட்டு நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்த விழுதை உருளைகிழங்கு மசியளுடன் பிசைந்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சோள மாவு, பால், மைதா, மிளகுத்தூள், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு ஆகியவற்றை போட்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- பிறகு பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கிவிட்டு அந்த பிரெட்டில் உருளைகிழங்கு மசியலை வைத்து பின் அதன் மேல் பஜ்ஜி மாவை தடவி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தயாரித்து வைத்துள்ள பிரெட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
- இப்போது சூடான பிரெட் உருளைகிழங்கு சீஸ் தயார்.
