மீன் குழம்பு செய்யலாமா..!
மீன் – 500 கிராம்
நல்லெண்ணெய் – ¼ கப்
சிவப்பு மிளகாய் – 1 எண்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 துளிர்
பூண்டு – 6 பல்
வெங்காயம் – 150 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1½ டீஸ்பூன்
புளி – 50 கிராம்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி இலைகள் – 1 தேக்கரண்டி
முதலில் புளியை லேசான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் போட்டு தாளித்து கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு சுண்டியதும் மீன் சேர்த்து 5 நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.