டேஸ்டியான உப்புமா கொழுக்கட்டை ரெசிபி..!
உங்க குழந்தைகள் காரம் சாரமாக சாப்பிடமாட்டார்களா கவலை வேண்டாம் இதோ உங்க குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு ஸ்நாக் வகைகளை நான் இப்போ சொல்ற மாதிரி செய்து கொடுத்து பாருங்க. அப்படியே மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
அரிசி ரவை 200 கிராம்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு சேர்த்து தாளித்து பின் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் அரிசி ரவையை சேர்த்து கிளற வேண்டும்.
தொடர்ந்து கிளறிவிட்டு அரிசி ரவை வெந்ததும் கிளறி இறக்கி வைக்கவும்.
அதற்கு பின் அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக செய்துக் கொள்ள வேண்டும்.
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் இட்லி தட்டில் அந்த கொழுக்கட்டைகளை வைத்து இட்லி பாத்திரத்தை மூடி வேகவைக்கவும்.
பின் ஒரு தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து அதில் தேங்காய் துருவி சேர்த்து பரிமாறலாம்.
இதனுடன் சாம்பார் மற்றும் சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.