காஞ்சிபுரம் பொறியாளருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பா?

கொரோனா வைரஸ் குணமாகி வீட்டுக்கு திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 42 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 26 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சில நாட்களில் குணம் அடைந்து வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில் அவர் மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதனை அறிந்து அவரை மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கொரோனா சச்சினின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா அறிகுறி; தமிழகத்தில் 2,635 பேர் தீவிர கண்காணிப்பு!