மீண்டும் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

நாளை மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்ற வாரம் நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார். இந்த கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில்,தற்போதைய அரசியல் நிலவரம், கட்சி ஆரம்பிப்பது குறித்து மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்பட்டது.

மேலும் அதில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும் கூறபடுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த் அப்போது அவர் “ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் தான் அது என்ன என்பது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில் அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.இந்த கூட்டம் அதே ராகவேந்திர ‌‌மண்டபத்தில் வைத்து நாளை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு நுழைவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் விவாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

What do you think?

‘யாரும் எதிர்பார்க்காத கூட்டணி’ மிஷ்கினுடன் கைகோர்க்கும் வடிவேலு!

‘கொரோனா வைரஸ் அறிகுறியால் விடுப்பு வேண்டும்’ தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதிய மாணவர்!