அண்ணாமலை, எடப்பாடி மேல் பாய்ந்து அடிக்கும் ஸ்டாலின்..! போதை பொருள் அவதூறு ..!!
போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த 8ஆம் தேதி குற்றவாளி ஜாபர் சாதிக் கைது செய்ததை தொடர்ந்து அந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி அவதூறாக பேசிய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடரப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 8ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.