வேளாண் கடன் உச்சவரம்பு..!! ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சொத்து அடமானம் இல்லாது.. வேளாண்மைக்கு இதுவரை வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் உச்சவரம்பு ரூ 1.60 லட்சம் என்பதை ரூபாய் 2 லட்சம் ஆக உயர்த்தி வழங்கிட அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இத்தொகையை வரும் ஜனவரி 1 முதல் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. வேளாண்துறையில் முதலீட்டை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் இது எனவும் பெருமைபட்டள்ளது.
இந்த உச்சவரம்பு இதுவரை ரூ 1.60 லட்சம் ஆக இருந்தாலும்… இதுவரை இந்த வரம்பு படி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயி எவர் ஒருவருக்கும் அவர் கொடுக்கும் நிலச்சான்று பரப்பிற்குண்டான தொகையை கடனாகக் கொடுப்பதில்லை. 5 ஏக்கருக்கான சாகுபடிச்சான்று கொடுத்து கடன் கோரினால் அந்த விவசாயிக்கு இரண்டு ஏக்கருக்கு மட்டுமே கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வழங்கப்படுகிறது.
கடன் கோரி விண்ணப்பிக்க செய்யும் விவசாயிகள் அனைவருக்குமே அவர்கள் சாகுபடி நிலத்திற்கான அளவில் முழுமையாக கடன் வழங்கப்படாமல் குறைந்த தொகையே வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான்.
இதனால்.. விவசாயிகளிடம் உள்ள நில பரப்பு அளவில் சான்றுகளை பெற்றாலும் தலைமை வங்கியிலிருந்து ஒதுக்கீட்டில் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஒரு பகுதி நிலத்திற்கு மட்டுமே இதுவரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தனக்கு தேவைப்படும் கூடுதல் தொகையை தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலை தற்போது உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பக் குழு கூட்டத்தை நடத்தி அதன் பரிந்துரையை பெற்று… கடன் தொகை அளவு உயர்த்தப்படுகிறதே தவிர… இதுவரை அதன்படி கடன் வழங்கப்படுவதில்லை என்ற நிலையில் தற்போது ரூ 2 இலட்சமாக உயர்த்திருப்பதாலும் பயனில்லை. எனவே கூடுதல் படுத்தியுள்ள படி.. சாகுபடிக்குகேற்ப கடன் தொகை முழுவதையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு காலத்தில் ஒதுக்கீடுட செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..