ரத்து செய்யப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! அவசர செயற்குழுவை கூட்டும் எடப்பாடி..!!
நாளை மறுநாள் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்..
வரும் 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 9.8.2024 – வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து அக்கட்சி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதாக அக்கட்சி நிர்வாகிகளே தெரிவித்திருந்தனர். அதன்பின் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுக தனது பழைய பலத்தை இழந்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை தழுவியது. ஒரு சில இடங்களில் மட்டுமே மூன்றாவது இடத்தை பிடித்தது.. எனவே மீண்டும் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வருகின்ற 2026ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் ஒரு சில இடங்களில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.