அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுவதைப் பார்த்துக் கொண்டு அண்ணா திமுக தொண்டன் சும்மா இருக்கமாட்டான் என அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவை ஒருமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விமர்சித்தார் என்றெல்லாம் அண்ணாமலை கூறியிருந்தார்.
சென்னையில் அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்,
நடக்காத ஒரு விஷயத்தை பற்றி அண்ணாமலை பேசுகிறார். பாஜகவை வளர்ப்பதற்காக உண்மைக்கு மாறான தகவல்களையும் மறைந்த தலைவர்களைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா குறித்து இப்படி பேசித்தான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். பேரறிஞர் அண்ணா மிகவும் உன்னதான ஒரு தலைவர். அவரைப் பற்றி நடககாத விஷயமாக, பசும் பொன் முத்துராமலிங்க தேவருடன் மோதல் ஏற்பட்டது என்கிறார்.
இது அண்ணா திமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. நடக்காத விஷயங்களை எல்லாம் நேரில் பார்த்தது போல அண்ணாமலை பேசுகிறார். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்காக தீர்மானமே நிறைவேற்றினோம். அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுவதைப் பார்த்துக் கொண்டு அண்ணா திமுக தொண்டன் சும்மா இருக்கமாட்டான். ஆகையால் அண்ணாமலை தமது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பேசினார்.
இதையும் படிக்க: ”இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான்”… முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!