அதிமுக வெட்கப்பட வேண்டும்..! பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்துள்ளோம்..!
பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து விட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும் என எடப்பாடிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர்- அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது, அருந்ததியர் சமூகத்தினருக்கு ஏற்றம் தரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியான அந்த ஆளுநர் உரையைத்தான் அன்றைய எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து, அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்கள்.
ஆளுநர் உரையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, 2008 மார்ச் 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அதில், அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த நீதியரசர் ஜனார்த்தனத்தின் விரிவான அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்தது. ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில், அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்வதென்றும், அந்த இடஒதுக்கீட்டின் செயலாக்கம் குறித்து அமைச்சரவைக் குழு ஆய்வு செய்வதென்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஜெயலலிதா வெகுண்டு எழுந்தார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் சொல்லவில்லை. அதனை அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் சுட்டிக் காட்டி பேசும் போது, ’’அதிமுகவின் முடிவு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதனை கலைஞர் அரசு சாதித்துக் காட்டி, அந்தச் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கியது. இந்த பின்னணியில் பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம். “தமிழக அரசு, 2009ம் ஆண்டு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது” என அறிக்கையில் பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தமிழக அரசு, திமுக அரசு எனச் சொல்ல எடப்பாடிக்கு என்ன தயக்கம் என்று கூறியுள்ளார் பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்துவிட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..