அதிமுக என்ன அவங்க அப்பா வீட்டு சொத்தா..? கடுப்பான கே.சி.பழனிசாமி..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமியை அவதூறாக பேசியதாக அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் தற்போது வழக்கறிஞ்சர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருப்பதால் அந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின் செய்தியலாளர்களை சந்தித்து பேசிய அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு வாக்கு குறைந்தது பற்றி கவலை இல்லை.. பாஜகவை விட அதிகம் வாங்கியதாக பெருமையாக நினைத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார்..
எடப்பாடி இன்னும் பொது செயலாளர் அளவிலேயே சிந்திக்கிறார்.. அனைவரையும் அரவணைத்துக்கொண்டு கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி அவர்களுக்கு துளி கூட இல்லை…
அவர் பேசுவதும் வெறும் அரசியல் அறியாமை என சொல்ல வேண்டும்.. “எதிரியாக இருந்தாலும் கூட இயக்கத்தில் இணைத்து ஒருவரை வரவேற்பது தான் அரசியல். ஆனால் எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு கட்சி ஒன்றும் அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல. அதிமுக தொண்டர்களின் சொத்து. ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, சசிகலாவை சந்திக்க போவதாக அவர் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..