ஐப்பசி அன்ன அபிஷேகம்..!! வழிபடுவதால் கிடைக்கும் பலன்..!!
ஐப்பசி மாதத்தில் மிகவும் விஷேசமான நாள் என்றால் அவை கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் அன்ன அபிஷேகம் தான்..
கந்தசஷ்டி நாட்களில் எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்கிறோமோ அதே போல தான் ஈசனின் அன்ன அபிஷேகமும்.
இந்த அன்ன அபிஷேகமானது சிவ பெருமானுக்கு 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.. முக்கியமாக ஐப்பசி மாத பெளர்ணமி அன்று.. இந்த அன்னாபிஷேகம் நடைபெறும்..
இந்த அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டால் அவர்களுக்கு கோடி புண்ணியம் கிடைத்து பிறவி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அப்படியாக இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகமானது வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது..
அன்று பௌர்ணமியானது., அதிகாலை 03.53 மணி துவங்கி, நவம்பர் 16ம் தேதி அதிகாலை 03.42 வரை பெளர்ணமி திதி இருக்கும். அன்றைய நாளில் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்களும் இணைந்து வருவது மிகவும் விசேஷமான நாள் என சொல்லலாம்…
அன்றைய நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்ன அபிஷேகம் செய்யப்படும்.. அந்த அன்ன அபிஷேகத்தை பார்ப்பது புண்ணியத்தை கொடுக்கும்..
மேலும் பிரசாதம் செய்யப்பட்ட அன்னத்தை சாப்பிட்டால் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகி சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்…
அன்றைய நாளில் சிவன் கோவில்களுக்கு அரிசி வாங்கி கொடுப்பது நன்மையை உண்டாக்கும். இதனால் நம்முடைய வீட்டில் எப்போதும் உணவு தட்டுப்பாடு இருக்காது.. மேலும் நம் மனதில் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..