“வான் சாகச நிகழ்ச்சி..” முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு..!!
இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932 இல் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் நமது சென்னையில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு முன்னோட்டமாக இன்று சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11மணிக்கு வான்வழி சாகசங்கள் தொடங்கியது..
இந்திய விமானப்படையின் 92 ம் ஆண்டு விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமான சாகச நிகழ்ச்சியானது இன்று காலை 10:30 மணிக்கு தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையின் மேல் சாகசங்கள் நடத்தப்பட்டு வருகிறது.. அதில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 72 விமானங்கள் தற்போது சாகசங்கள் நிகழ்த்தி வருகிறது.
இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்., துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, டிஆர்பி ராஜா, தயாநிதி மாறன் எம்பி, சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆகியோர் நேரில் சென்று ரசித்து வருகின்றனர்..