பெரும் பதட்டத்தில் விமானநிலையம்..! அச்சத்தில் பயணிகள்..! 5வது முறையாக வந்த..?
சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று நள்ளிரவு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதனையடுத்து Bomb Squard-க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த அதிகாரிகள்..,வாகன நிறுத்தும் இடம், விமான எரிபொருள்கள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல் ஏற்றும் இடம் என விமான நிலையம் முழுவதும், சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எங்கு தேடியும் வெடிகுண்டு கிடைக்காததால் அதன் பின்னரே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்று சோதனையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்..? எதற்காக மிரட்டல் விடப்பட்டது.. அதன் பின்னணியில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
– வெ. லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..